கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் டயானா கமகே

 

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என டயனா கமகே யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

எனினும் அந்த விடயம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில்,   தான் முன்வைத்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் டயானா கமகே கூறினார்.

அத்துடன், முன்னதாக இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த விஜித ஹேரத் உள்ளிட்டோர் தற்போது அமைச்சரவையில் இதற்கு அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.

உலக நாடுகளில் இவ்வாறான விடயங்கள் நடைமுறையில் இருப்பதால் அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன.

ஆகவே இலங்கையிலும் அவற்றை முன்னெடுக்கும் போதே பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கசினோவுக்கும் தற்போது இலங்கையில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் டயனா கமகே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *