தபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் கடமையிலிருந்து விலகிசெயற்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களின் கொடுப்பனவு, உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நேற்று மாலை 4 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, நேற்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள் பணபகிஷ்கரிப்பினை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளன.
இதேவேளை அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பணிபகிஷ்கரிப்பினை மேற்கொள்வது நியாயமற்ற விடயமாகும் என தபால் மா அதிபர் ஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் இன்று காலை தபால் மால அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் .தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதன்போது மீண்டும் வலியுறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.