யாழில் சகலனுடன் கடலுக்குச் சென்ற நபர் ஒருவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
விநாயகர் வீதி, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய அரியகுட்டி ஹரிஹரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு சகலனுடன் கடலுக்குச் சென்ற இவர், இன்று அதிகாலை 1 மணியளவில் நெஞ்சு வலியால் படகிலேயே மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடல்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.