கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் கூடியுள்ளனர்.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹஷிம் மற்றும் பழனி திகாம்பரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, காவிந்த ஜயவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.