குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பில் AMM. ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜே.பீ ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதன்போது நீதிமன்றம், சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடக் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளம் காட்டி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு நாளை காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *