முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில்,அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி.
ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான சிகிச்சை முடிந்த பிறகு, அவர் பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.