5 வருடங்களாக தடைப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதத்தில் வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் தலைமை பொலிஸ் பரிசோதகர் வரை பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார்.
இந்த பதவி உயர்வுகள் அடுத்த மாதம் அமுலுக்கு வர உள்ளன,
மேலும் 5,000 க்கும் மேற்பட்ட பொலிஸ்அதிகாரிகள் பயனடைவார்கள்.
இந்த நடவடிக்கை, அதிகாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பதவி உயர்வு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.