யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் சாலைக்கு இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மீள் பயன்பாட்டுக்கு திருத்தப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இதன்போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் செம்மணிக்கு செல்வாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.