நடிகர் ரவி மோகன் – ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
இதற்கான பிரம்மாண்டமான ஆரம்ப விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் ரவி மோகன்- அவர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ப்ரோ கோட்’ எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார்.
அதனுடன் தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘தி ஆர்டினரி மேன்’ எனும் திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி, இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் கன்னட சுப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிவகார்த்திகேயன், கார்த்தி இவர்களுடன் எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, மணிகண்டன் நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், ஜெனிலியா தேஷ்முக் இயக்குநர்கள் பேரரசு, கார்த்திக் யோகி உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ‘ப்ரோ கோட்’ மற்றும் ‘தி ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் ப்ரோமோக்கள் திரையிடப்பட்டு, வருகை தந்திருந்த பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது.