
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்குத் தாம் தெரிவித்திருந்த கருத்தைத் திரிபுபடுத்தி, மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு யூடியூப் தளத்தினர் தவறாகத் தலைப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அதையிட்டு விசனம் தெரிவித்துள்ளார்.