
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக அரச நிதியைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் இலங்கையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு சம்பவமாகப் பதிவாகியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாகவும் இது கருதப்படுகிறது.