
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிர்வாகத் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளில் தொடர்ச்சியாக ஒன்பது வருடங்கள் மாத்திரம் ஒருவர் செயற்பட முடியும் என்பது பிரதானமானதாகும்.