
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் (25) திங்கட்கிழமை கட்டளை பிறப்பித்துள்ளது. குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழப்பட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 25ம் திகதி திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை அகழ்வதற்கு நீதிபதி உத்திரவிட்டார்.