ஐக்கிய தேசிய கட்சியுடனான இணைவு இம்முறை சாத்தியமாகும்! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. நம்பிக்கை

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும்.  இம்முறை இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் அரசாங்கம் தனக்கு தேவையானவாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை வழி நடத்தி அவரை பழிவாங்கியுள்ளது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

சாதாரண மக்களுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டாலும் நாம் அவர்களுக்காக குரல் கொடுப்போம். வழக்கு விசாரணையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கான சட்ட உதவிகளை நாம் வழங்குவோம். 

அரசியல் ரீதியில் ஒன்றிணைவதாயின் அதற்கு கொள்கை ரீதியில் இணக்கம் காண வேண்டும். அதற்கு இன்னும் காலமிருக்கிறது. அது தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய கூட்டணியை எம்மால் உருவாக்க முடியும். 

இது எமது இரு கட்சிகளினதும் ஆதரவாளர்களது எதிர்பார்ப்புமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இம்முறை இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *