செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
இப்போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதைகுழிகளுக்கு நீதி கோருவதற்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் கிளிநொச்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா
கிளிநொச்சி