கம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் கூரை வழியாக உள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.