கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் செல்ல மாட்டேன்; மன்னார் நகரசபையின் புதிய செயலாளர் ஆணவ பேச்சு

மன்னார் நகரசபையின் புதிய செயலாளர், கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் செல்ல மாட்டேன் என்று முறையிடச் சென்ற மக்களுக்கு எதிராக ஆணவமாக பேசியுள்ளார்.

மன்னார் நகரசபையின் புதிய செயலாளரின் ஆணவப் பேச்சு காரணமாக மக்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தெரியவருகையில்,

மன்னார் நகரசபைக்கு சொந்தமான பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து சிறுவர்களுக்கு ஆபத்தாகும் நிலையில், இதை தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

அவை தொடர்பில் அனுமதி கிடைக்க பெற்றும் எந்த ஒரு செயற்பாடும் இடம் பெறவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் நகரபகுதியில் நகரசபைக்கு சொந்தமான  நிறுவனங்களை குத்தகைக்கு பெற்று நடாத்தும் குத்தகை தாரர்கள் நகரசபை செயளாலரை சந்தித்து முறையிட சென்றுள்ளனர்.

இதன்போது, செயலாளர் உரிய பதிலை அளிக்காமல், தொழில்நுட்ப உத்தியோகஸ்தரை அழைத்து, உங்களால் கண்ட கண்டவர்கள் என்னிடம் கேள்வி கேட்பதாக முறையிடும் மக்களுக்கு எதிராக ஆணவமாக பேசியுள்ளார்

மேலும், நகரசபை உத்தியோகஸ்தர்களுடன் அவமரியாதையாக நடந்து கொண்டு, பல முறைப்பாடுகளை நிறைவேற்றாமல் இருந்துள்ளார்.

இந்த நிலைமையால் மன்னார் பகுதியில் திட்டமிட்ட பல பொதுசேவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் மன்னார் மக்களிடையே கவலை மற்றும் அதிருப்தியைக் ஏற்படுத்தியுள்ளதோடு,

நகரசபைக்கு சொந்தமான பல நிறுவனங்களை குத்தகைக்கு வழங்கி, நிலையான சேவைகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் குத்தகைதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *