பெண் சந்தேக நபரை கைது செய்ய உதவுங்கள்.! பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு, பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக சுமார் மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை 5 பெண்கள் இணைத்து மோசடி செய்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் ரக்மானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த பெண் சந்தேக நபர்  தனது வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது தலைமுறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

40 வயதுடைய சந்தேக நபர் ரக்வானை, பொதுப்பிட்டியா வீதி, கந்தகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலாகே ஹர்ஷனி பிரியந்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரை பற்றி தகவல்கள் கிடைத்தால் கீழ்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார்  பொதுமக்களை கோரியுள்ளனர். 

தொலைபேசி எண்கள் – 

ரக்வானை பொலிஸ் நிலையம் – 071 – 8591394 

ரக்வானை பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு – 071 – 8593808

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *