ஆற்றில் போன இளைஞரைத் தேடி மீட்பு நடவடிக்கை

அரநாயக்க, மார்ச் 12

அரநாயக்க – உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் மாஓயா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேரில் உடுவெவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மதுபோதையில் குளித்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காணாமல்போன இளைஞனை தேடும் பணிகளை பொலிஸார், கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply