
காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் ஊடகவியலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்படுவது உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 250க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் ஒருமித்த குரலில் இந்த அநீதிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன. தமது பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களிலும் தமது ஒலி, ஒளி தயாரிப்புகளிலும் இஸ்ரேலின் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன

