உயர் பதவிகளை அலங்கரித்த போதிலும் எளிமையைக் கைவிடாத தலைவர் பாக்கீர் மாக்கார்

இன்று நாங்கள் எமது நாட்டின் பெரு­மைக்­கு­ரிய ஒரு மகனை நினைவு கூரு­கிறோம். எம் மண்ணின் மைந்­தனை நாம் நினைவு கூரு­வது இவர் எமது பாரா­ளு­மன்றின் முன்னாள் சபா­நா­யகர் என்­ப­தற்­காக மட்­டு­மல்ல, தேச­மான்ய விருது பெற்ற ஒரு சாத­னை­யாளர் என்­ப­தற்­காக மட்­டு­மல்ல, ஒரு கெபினட் அமைச்­ச­ராக, ஆளு­ந­ராக எமது தாய் நாட்­டுக்கு சேவை செய்தார் என்­ப­தற்­காக மட்­டு­மல்ல, இவர் வாழ்ந்த வாழ்க்கை, இவர் பயணம் செய்த பாதை, செய்த நற்­ப­ணிகள், விட்டுச் சென்ற மர­புகள் இவை­ய­னைத்தும் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனி­தர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாமல் இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கும் ஒளி விளக்­காக ஒரு தீபத்தை விட்­டுச்­சென்­றி­ருக்­கின்ற மனி­தா­பி­மானம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்ற கார­ணத்­திற்­காகவே ஆகும்.

Leave a Reply