கிளிநொச்சியில் சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு!

கிளிநொச்சி சாதாரண தர அமைப்பின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்றது.

இன்னிய தமிழ் பாரம்பரிய கலைவாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அமைப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு கல்வி உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், விழிப்புணர்வற்றவர்களுக்கான டிஜிட்டல் முறையிலான வெள்ளை பிரம்புகளை கண்டுபிடித்த மாணவன் உள்ளிட்ட சாதனையாளர்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கௌரவித்தார்.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக 96 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், மாவட்டத்தின் இரண்டு கல்வி வளையங்கள் சார்ந்த வலயக் கல்வி பணிப்பாளர்களும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிளிநொச்சி சாதாரண தர அமைப்பி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply