ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிவிவகாரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் இன்று  காலை சுமார்  ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை (08) ஆரம்பமாகவுள்ள  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான சிறப்பு சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு மனித உரிமைகள் அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கூடுதலாக, வெளியுறவு அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply