திருமலையில் சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின் நிறைவுநாள் நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியின் 150 மணித்தியாலயங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின் பாடநெறி நிறைவுநாள் நிகழ்வு நேற்று (11) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த 18 தினங்களாக மாவட்ட செயலகத்தில் இப்பாடநெறி நடைபெற்று வந்ததுடன் 36 உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.

அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களோடு தொடர்புபடுகின்றபோது அவரவர் மொழியிலேயே உரையாடும்போது அது நேரடியாக அவரவர் உள்ளங்களை தொட்டுச்செல்வதாக அமையும்.

இரு மொழிகள் தெரிந்தவன் இரு மனிதனாகின்றான். எனவே மொழியை தெரிந்து கொள்வதன் மூலம் மக்கள் சேவையை செவ்வனே செய்ய முடியும் என்று இதன்போது மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.

சிங்கள கலை கலாசார விழுமியங்களை ஒட்டியதாக பல நிகழ்வுகள் இங்கு அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சிவகங்கா சுதீஸ்னர் ,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட பாடநெறி பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply