
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியன நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அன்றாடம் நிகழும் கொலைகளும், சட்டவிரோத நடவடிக்கைகளும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இருப்பினும் இந்த சவால்களை எதிர்கொள்வதில், அரசாங்கமும் பொலிசாரும் எடுத்துவரும் சில துணிச்சலான நடவடிக்கைகள், நம்பிக்கையைத தருவதாக உள்ளன.

