
கட்டார் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

