நானுஓயா புகையிரத நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடி பொழுதைக் கழித்துள்ளனர்.
நானு ஓயா புகையிரத நிலையத்தில் ரயிலுக்காக இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் காத்திருந்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 11001 என்ற சிறப்பு ரயில் நேரம் தாமதமாக சென்றுள்ளது.
குறித்த நேரத்திற்கு ரயில் செல்லாததால் ரயிலுக்காகக் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் நடனமாடியுள்ளனர்.
ரயில் தாமதமாகி வரும் என்பதைப் புரிந்து கொண்டு சலித்துக்கொள்ளாமல் நடனமாடி அந்தப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்துள்ளனர்.