
கொழும்பு, மார்ச் 12
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக விவாதம் நடத்துவற்குத் தயார் எனவும் அதற்கான நேரத்தை ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் பதிலளிக்க நிதி அமைச்சர் வரவேண்டுமென எதிரணி சார்பில் நேற்றும் சபையில் கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் கூடியது. தினப்பணிகளை தொடர்ந்துஅநுர குமார திசாநாயக்க எம்.பி ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். அவரை தொடர்ந்து எதிரணி எம்.பிகள் பலரும் கருத்து வெளியிட்டனர்.இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அநுர குமார எம்.பி , பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கூட அமைச்சர்கள் பாராளுமன்றம் வந்து விளக்கமளிப்பர். நிதி அமைச்சர் நாட்டு நிலை குறித்து விளக்கமளித்தால் எமக்கு விவாதம் கோரலாம் என்றார்.




