வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா? மக்கள் கடும் விசனம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம் பெற்று வருகின்றன.  குறிப்பாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 200m க்கு உட்பட்ட இடத்தில் பல தொன் மண் அண்மைக்காலத்தில் அகழப்பட்டு வருகிறது 

குறித்த பிரதேசமானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாரியளவு மண் பிட்டிகள் மற்றும் சிறு நாவல் காடுகளை கொண்டதாக காணப்பட்டது. தற்பொழுது இவ் பிரதேசம் பாரியளவு பள்ளங்கள் மற்றும் குழிகலாகவே காணப்படுகின்றது.  

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 

ஒரு குறித்த மண் மாஃபியா கும்பல் நாள் தோறும் பல டிப்பர் மண்களை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக சட்டத்திற்கு முரனாக இரவு நேரங்களில் மண் ஏற்றுமதி செய்கிறது குறிப்பாக இரவு நேரங்களில் எந்த வித பயமும் இல்லாமல் சட்ட ரீதியாக மண் அகழ்வது போல  மண் கொள்ளை நடவெடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மண் அகழும் பிரதேசத்தில் இருந்து மருதங்கேணி பொலிஸ் நிலையம் சுமார் 1km  தூரத்தில் உள்ளது ஆனாலும் இது வரை அச் சம்பவம் தொடர்பாக எந்த வித சந்தேக நபர்களும் குறித்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவில்லை.  

இதன் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸ் மண் மாஃபியாவிடன் கை சலப்பு செய்கிறதா இல்லை இவ் மண் கொள்ளையினை பாத்தும் பார்க்காமலும் இருக்கிறதா என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது இதனை விட பொலிசார் ஒரு நாள் தமது கடமையின் நிமித்தம் இரவு நேரங்களில் அவ் இடத்திற்கு சென்று இருந்தால் இவ் பாரியளவு மண் கொள்ளையினை கட்டு படுத்தி இருக்கலாம் மற்றும் மண் அகழ்ந்து இரவு நேரங்களில் வீதி வழியாகவே வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறது இதனை இது வரைக்கும் ஏன் கட்டுப்படுத்த படவில்லை இதன் பிண்ணனியில் நடப்பது என்ன என பல கேள்விகள் எழுகின்றன 

இதனை விட தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையத்தில் காவல் செய்யும் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ் மண் கொள்ளை சம்மந்தமாக இது வரைக்கும் எந்த வித முறைப்பாடுகளும் செய்ய வில்லை இதன் பின்னணியில் தெரிய வருவதாவது இவ் சுத்தரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தான் குறித்த பிரதேசத்தில் அதிகளவான மண் விநியோகம் இடம்பெறுவதோடு இவ் கொள்ளை சம்பவத்தில் இவ் நிலையத்தில் பணி புரியும் பணியாளர் களும் ஈடு படுகின்றனரா என பல்வேறு பட்ட சந்தேக கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது 

இல்லை யெனில் இவ் சட்டத்திற்கு முரணானதும் திட்டம் இட்டு வடமராட்சி கிழக்கு மண் வளத்தை கொள்ளை அடிக்கும் சம்பவத்தை தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் தான் மேற்கொள்கிறதா எனவும் சந்தேகிக்க வைக்கிறது 

இவ் பாரியளவு மண் கொள்ளைக்கு பொறுப்பு கூரளில் கட்டாயம் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார் பதில் சொல்ல வேண்டும் இல்லை யெனில் இவ் பாரியளவு மண் கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படவேண்டும் இனி இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான வகையில் மண் விநியோகம் இடம் பெற கூடாது என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *