ஜித்தன் திரைப்படத்தில் நடித்து பிரபலமான ரமேஷ். தொடர்ந்து சில திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
அருண் ராஜ் பூத்தணல் இயக்கத்தில் உருவாகும் ஹிடன் கேமரா திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க
கிருஷ்ணா தவா கதாநாயகியாக நடிக்கிறார்.
மீண்டும் கதாநாயகனாக நடிப்பது குறித்து ரமேஷ் கூறுகையில், “மீண்டும் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சி. சினிமா எனக்கு மிகவும் பிடித்த பயணம். இப் பயணத்தில் தொடர்ந்து நீடித்திருப்பதும் நிலைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.





