
இலங்கை மின்சார சபை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. சுமார் 26 ஆயிரம் சேவையாளர்கள் மின்சார சபையில் உள்ளார்கள். பிரச்சினைகள் உள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூறுபவர்கள் எவருமில்லை. சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே மின்சார சபையை நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் சேவையாற்றலாம். விருப்பமில்லாதவர்கள் செல்லலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.




