
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை கவனத்திற்குரியதாகும். எதிர்காலத்தில் இவ்வாறான கசப்பான சம்பவங்களும் இன வன்முறைகளும் நிகழாதிருக்க பல்வேறு பரிந்துரைகளையும் ஆணைக்குழு இந்த அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

