
அரசியல் களமும், சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல்களும், பாதுகாப்பு கெடுபிடிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த சூழலில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு பலியாகி தனது வாழ்வின் ஒரு பகுதியை இழந்துவிடுகின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக கையடக்கத் தொலைபேசியில் ஸ்டிக்கர் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டை முன்வைத்து 2024 ஒக்டோபரில் தெஹிவளையில் கைது செய்யப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த 21 வயதான முஹம்மத் ரிபாய் முஹம்மத் சுஹைல், இதன் சின்னமாக மாறியுள்ளார்.




