[15:46, 19/09/2025] Shanu: பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
காணி பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது, கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இவ்வாறு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கில் காணிகள் விடுவிப்பது உட்பட பல பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பினார்.
[16:03, 19/09/2025] Shanu: விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது
விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கக் கையிருப்புடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஆவார்.
சந்தேக நபர் விமான நிலையத்தில் பணியில் இருந்தபோது, விமான நிலையத்திற்கு வெளியே இரகசியமாக தங்கக் கையிருப்பை எடுத்துச் செல்ல முயன்ற நிலையில், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுங்க அதிகாரிகள் அவரது வசம் இருந்து 550 கிராம் எடையுள்ள 40 24 கெரட் தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளனர்.
[16:15, 19/09/2025] Shanu: அரச நிறுவன கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை வரவேற்கத்தக்கது – வடக்கு ஆளுநர்!
ஆரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எண்ணிமைப்படுத்தல் மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19) வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான எண்ணிமைப்படுத்தலின் ஒரு அங்கமாகவே GovPay அமைந்துள்ளது.
இன்று இலங்கை மின்சார சபையின் மின்பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பலரும் வீட்டிலிருந்தே செலுத்துகின்றார்கள். வீண் அலைச்சல், நேர விரயத்தை இல்லாமல் செய்தல் என்பவற்றையே பலரும் விரும்புகின்றார்கள்.
தற்போதுள்ள சூழலில் கணவன் மற்றும் மனைவி இருவருமே தொழில் செய்பவர்களாக உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசாங்க நிறுவனங்களின் சேவைகளுக்குரிய கட்டணங்களை அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று குறித்த நேரத்துக்குள் செலுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றது. எனவே, இவ்வாறு வீட்டிலிருந்தே எமது கொடுப்பனவுகளைச் செய்யக் கூடிய சேவைகள் மிக அவசியமானவையே.
இத்தகைய எண்ணிமைப்படுத்தல் ஊடான சேவைகளால் ஊழல் மோசடிகள் குறைவடையும். இந்தச் சேவைகள் வெளிப்படைத்தன்மையானது. தரவுகளை இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஊடாக நிர்வாகச் செலவீனங்கள் கூட அரச நிறுவனங்களுக்கு குறைவடையும். அத்துடன் அரச நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும் இது உதவும்.
இதுவரை 135 அரச நிறுவனங்கள் இந்தச் செயலியில் இணைந்துள்ளதுடன் அவற்றின் ஊடான 700 இற்கு மேற்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இதை வடக்கு மாகாணத்துக்குட்பட்ட அரச திணைக்களங்களில் நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தவேண்டும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை இந்தச் சேவைக்குள் முதல் கட்டமாக உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இது தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் அவர்களுடனான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, லங்காபே நிறுவனத்தின் பிரதி தலைமை நிறைவேற்று அதிகாரி டினுக பெரேரா, லங்காபே நிறுவனத்தின் முதன்மை சேவை வழங்கல் அதிகாரி செல்வி துசா முகுந்தன், லங்கபே நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சிவபிரசாந் ஆகியோர் கலந்துகொண்டனர்.




