திருகோணமலை முத்து நகர் விவசாயிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன இன்று (19)மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து சந்தித்தார்.
இதில் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டு முத்து நகர் விவசாய காணி தொடர்பிலான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தார்.
முத்து நகர் விவசாயிகள் இன்று (19)மூன்றாவது நாளாக சத்தியக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தங்களது விவசாய நிலங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரி இதனை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் விவசாயிகளுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் இலங்கை துறை முக அதிகார சபையினருடனும் கலந்துரையாடி விவசாய செய்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளுக்காக பதிலை வழங்குவதாகவும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.




