கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகியோரினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களும் நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் கிளிநொச்சி தெற்கு கல்வி நிலையத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி நிலைய முகாமையாளர் கேசவானந்த மூர்த்தி, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான தயாபரன் மற்றும் சுப்பையா, கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்திர்கள், அக்கராயன் வட்டார பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




