
இலங்கையிலுள்ள முக்கிய பிரதான அமைச்சுக்களில் ஒன்றான வெளிவிவகார அமைச்சில் இஸ்ரேலின் ஆதிக்கம் அதிக நிலவுகின்றதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேலியர்களினால் பலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநியாயங்களை கண்டித்து இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற ஊடக அறிக்கைகளே இந்த கேள்வி எழக் காரணமாகும்.