2025 ஆசிய கிண்ணம் – Super Four சுற்று இன்று

2025 ஆசிய கிண்ணக்  கிரிக்கெட் தொடரின்  Super Four சுற்று இன்று(20) நடைபெறவுள்ளது.

டுபாயில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில்(20) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதேசமயம் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை(21) டுபாயிலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை எதிர்வரும் 23 ஆம் திகதி அபுதாபியிலும் மோதவுள்ளன.

இந்த நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய நாள் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.  அதன்படி, துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 189 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத்  தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *