பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் வட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.