தியாக தீபம் திலீபனின் 6 ஆம் நாள் நினைவு கூறல் நினைவஞ்சலி, திருகோணமலை -சிவன் கோவில் அருகில் அமைந்துள்ள திலீபனின் திரு உருவப்படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்று சனிக்கிழமை (20) மாலை இடம்பெற்றது.
இதன்போது திலீபனின் திரு உருவப்படத்துக்கு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.