மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றவாளிகள் அல்லது தீவிரவாத சக்திகள் பாதுகாப்புப் படை சீருடையில் மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களைச் செய்ய முயற்சிப்பதைத் தவிர்க்க,
காவல்துறை மா அதிபர் தமது அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதன்படி, முக்கியஸ்தர்களின் நிகழ்வுகளுக்கு நியமிக்கப்பட்ட பணியாளர்களைப் துல்லியமாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு,
காவல்துறை தலைவர் பிரியந்த வீரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வாரம் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உள்ளக சுற்றறிக்கையில் இந்த அறிவுரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமீபத்தில், சட்டத்தரணியாக மாறி துப்பாக்கி சுடுகாட்டத்தில் சந்தேக நபரை கொலை செய்த சம்பவம் நினைவுகூரும் வகையில்,
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறை அதிபர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.




