
இலங்கையில் நேரலைச் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகம் இடம்பெறுவதைக் குறிக்கும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் பெரிதாக கிடைக்கவில்லை. எனினும், இளைஞர் யுவதிகள் இதில் ஈடுபட்டமைக்கான பல சான்றுகள் உள்ளன. பல்வேறு பிரதேசங்களில் பொலிசார் நேரலைப் பாலியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர். இப்பிரச்சினை தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து மேலும் தலை தூக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.




