அமெரிக்காவின் வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி மையங்களை கொழும்புக்கு மாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொழும்புக்கு வந்துள்ளன.
இவைகள் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுக் குத்தகை ஒப்பந்தங்களில் தெளிவாக சேர்ந்துள்ளன.
அமெரிக்கா இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது.
அதே நேரத்தில் இலங்கைக்கு வரி 20 சதவீதமாக விதித்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த போக்குகள் தொடர்ந்தால், இலங்கையில் ஆடைத் தொழில்துறைக்கு புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பணியாளர்கள் பெருகும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




