கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக தொகுதி அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலேயே இத் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதனை அடுத்து தீயணைப்பு பணிகளில் 12 தீயணைப்பு வாகனங்களும், இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டு பல மணி நேரத்திற்கு பின்னர் தீப்பரவல் நேற்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அந்த பகுதிகளில் இன்னும் புகை வௌியேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




