கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்கவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் காலமானார்.
இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில், கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

