தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பரவியுள்ள ‘ஜயன்ட் ஸ்னேக்ஹெட்’ மீன்களை கட்டுப்படுத்த “தெதுரு ஓயா மீன்பிடி 2025” போட்டியும் பாதுகாப்பு திட்டமும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் ஐந்நூறு போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனை கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் அங்லிங் பிரஜாவ் ஸ்போர்ட்ஸ் ஃபிஷிங் கிளப் மற்றும் அப்பிரதேச மீனவர் சங்கங்கள், வயம்ப பல்கலைக்கழகம் இணைந்து நடந்தனர்.
இந்த போட்டியின் மூலம் அதிகளவில் உள்ள ஆக்கிரமிப்பு மீன்களைச் சூழலிலிருந்து அகற்ற முடியும் என கூறப்பட்டது.
மேலும், மீனவர் சமூகத்திற்கான 15 மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் பங்குபற்றியோருக்கு பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதேவேளை, தெதுரு ஓயா பகுதி மீனவ சமூகத்தினருக்கென பிரத்தியேகமாக 15 Fishing Rods, 3 தூண்டில் சுழற்சிகளும் (Reels) அடங்கிய பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








