புதுக்குடியிருப்பு படுகொலை 35 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!

புதுக்குடியிருப்பு படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை ஊர்ப்பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 1990, செப்டம்பர்,21,ல் இராணுவமும் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தமிழினப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (21/09/1990) இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஷ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், முஷ்லிம் ஊர்காவல் படையினரும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். 

பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும் பலர் படு காயங்களுடனும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தப்படுகொலையில் 09, ஆண்களும் 08 பெண்களும் மொத்தம் 17, பேர் இதில் சிறு குழந்தைகளும் உள்ளனர். 

இன்று 2025,செப்டம்பர்,21, ல் 35, வது ஆண்டு கடந்தும் இந்த இனப்படுகொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லையென இறந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் போது இறந்தவர்களின் நினைவாக ஈகை சுடர் ஏற்றப்பட்டு, மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *