கண்டிக்கு சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை; தீடீரென மயங்கியதால் பரபரப்பு

ஹம்பாந்தோட்டை மற்றும் கோன்னொருவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று கண்டிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, ​​அவர்களில் ஐந்து பேர் திடீரென மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை தாவரவியல் பூங்காவை நேற்று மாலை பார்வையிட்ட பிறகு, மாணவர்கள் குழு வெளியே வந்து அருகிலுள்ள கடைகளில் இருந்து சிற்றுண்டி மற்றும் பால் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்பின் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றுள்ளதுடன்

பின்னர், மாணவர்கள் குழு அவர்களின் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த தேசிய கண்காட்சி மைதானத்திற்கு அருகில் வந்தபோது, ​​ஐந்து மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். 

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் அவர்கள் உணவு வாங்கியதாகக் கூறப்படும் கடைகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *