முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் முதியவர் ஒருவர் தனித்திருந்த வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டின் மதிலில் ஏறிப் பாய்ந்து வீட்டுன் முகப்புப் பகுதியில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளனர்.
இதன் போது வீட்டின் முகப்பு கதவு மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன எரிந்து நாசமாகியுள்ளது.
முகத்தை துணியால் மூடி கட்டியவாறு தலைக்கவசம், மழைக் கவசம் என்பனவற்றை அணிந்து மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
சுதாகரித்துக் கொண்ட முதியவர் அயலவர்களை அழைத்த போது தாக்குதல்தாரிகள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ நேரம் பொலிஸாருக்கு அழைப்பெடுத்து தெரிவித்த போதும் நான்கு மணிக்கே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.







