இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதாரம்பம் இன்று திங்கட்கிழமை(22)துர்க்கைக்குரிய பூஜையுடன் ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் இந்த விரதமானது, சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதஷ்வாமி ஆலயத்தில் வசந்த நவராத்திரி என்ற பெயரில் ஆரம்பமானது.
இதில் முதல் மூன்று தினங்களும் துர்க்கைக்காகவும், மற்றும் அடுத்து மூன்று தினங்களும் லட்சுமிக்காகவும், இறுதி மூன்று தினங்களும் சரஸ்வதிக்காகவும் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் முன்னேஸ்வரத்தில் மூன்று கடவுளுக்கும் பொதுவாக கொலுக்கள் வைக்கப்பட்டு பக்தி பூர்வமாக சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.




